கணக்கியலில் இரட்டைப்பதிவு கணக்குவைப்பு முறை (Double-entry bookkeeping system) என்பது, வியாபார நிறுவனம் மற்றும் வியாபாரமல்லா நிறுவனங்கள் என்பவற்றில் இடம்பெறும் பலவிதமான நிதிக்கொடுக்கல் வாங்கல் ஊடுசெயல்களைப் பதிவு செய்வதற்கெனப் பின்பற்றப்படும் ஒர் அடிப்படை நியம முறையாகும். நிறுவனங்களின் நிதிநிலமை,நாணய மதிப்பு, பலவகையான வர்த்தக நடவடிக்கையால் ஏற்பட்ட விளைவுகள் என்பனவற்றை கணிப்பதற்கு இம் முறை பெரிதும் உதவுகின்றது.
இக் கணக்குவைப்பு(bookkeeping) முறையில் ஒவ்வோர் ஊடுசெயலும் இரு வேறுபட்ட கணக்கேடுகளில் பதியப்படும். காரணம் நிறுவனத்தில் இடம்பெறும் ஒவ்வோர் ஊடுசெயலும் இருவிதமான தாக்கங்களை உண்டு பண்ணும் எனும் அடிப்படை அணுகுமுறையே ஆகும்.உதாரணமாக பொருட்கள் கொள்வனவின் போது ஏற்படும் செலவு தொகை கொள்வனவு க/கு இல் வரவாகவும், அதே தொகை காசு க/கு இல் செலவாகவும் பதியப்படும் இதற்கு மறுவலத்தே விற்பனையின்போது பெறப்பட்ட தொகை காசு க/கு வரவாகவும் விற்பனை க/கு செலவாகவும் பதியப்படும். இங்கு முடிவில் மொத்த வரவு/பற்றுகள் (debit) மொத்த செலவு/கடன்களுக்குச்(credit) சமப்படும்.
பதிவுகளை மேற்கொள்ள கணக்குஏடுகள் (general ledger) T accounts ஆக அமைக்கப்பட்டு வரவுப்பதிவுகள் (debit ) இடதுபக்கமும்,செலவுப்பதிவுகள் (credit) வலதுபக்கமும் பதியப்படும்.
Source : www.ta.wikipedia.org
Source : www.ta.wikipedia.org
No comments:
Post a Comment