பேரேடு | வரவுமீதி | செலவுமீதி |
---|---|---|
காசேடு | 220,000 | |
மூலதனம் | 320,000 | |
பெற்ற வாடகை | 15,000 | |
கொள்வனவு | 25,000 | |
சம்பளம் | 50,000 | |
விளம்பரம் | 50,000 | |
காப்புறுதி | 2,000 | |
மின்சாரம் | 2,000 | |
வரி | 6,000 | |
345000 | 345000 |
பரீட்சை மீதில் கணக்கியல் பேரேடுகளில் மீதி வரவாக இருப்பவை வரவு நிரலிலும்,மீதிகள் செலவாக இருப்பவை செலவுப் நிரலிலும் பதியப்படும். முடிவில் வரவு செலவு இவற்றின் மொத்த கூட்டுத்தொகையும் சமப்படும்,அவ்வாறு சமப்படாவிட்டால் பேரேட்டு பதிவுகளில் வழுக்கள் இருப்பதாக கொள்ளப்படும்.இத்தகைய தன்மையால் பரீட்சை மீதியானது ஏடுகளின் துல்லியத்தன்மையினை உணர்த்தும் ஒர் குறிகாட்டியாக அமைகின்றது.பரீட்சை மீதி சமப்படுவதை மாத்திரம் கருத்தில் கொண்டு பேரேடுகளின் வழுவற்றதன்மை கொண்டதாக உறுதியாக கூறமுடியாது.எடுத்துக்காட்டாக, இடம்பெறும் வியாபார ஊடுசெயலொன்றினை பதியும் போது வரவினை செலவாகவும்,செலவினை வரவாகவும் பதிந்தால் இங்கு பரீட்சை மீதி சமப்படும் எனினும் இங்கு பதிவுமுறை பிழையாகும்.
Source : www.ta.wikipedia.org
Source : www.ta.wikipedia.org
No comments:
Post a Comment