இரட்டைப்பதிவு கணக்குவைப்பு முறையானது கணக்கீட்டுச் சமன்பாட்டினால் ஆளப்படுகின்றது.கீழ்வரும் சமன்பாட்டிற்கமைவாகவே கணக்கீடுகள் மேற்கொள்ளப்படும் :
- சொத்து = பொறுப்புக்கள் + உரிமையாண்மை
இச்சமன்பாட்டினை விரித்துக்கூறும்போது பின்வருமாறு காணப்படும் :
- சொத்து = பொறுப்புக்கள் + உரிமையாண்மை + (வருமானம் − செலவீனம்)
முடிவாக இதனை எளிய சமன்பாட்டு வடிவில் மாற்றும்போது :
- சொத்து+ செலவீனம் = பொறுப்புக்கள் + உரிமையாண்மை + வருமானம்
மேலே விரித்து எழுதப்பட்ட கணக்கீட்டுச் சமன்பாடானது எக்காலத்திற்கும் உண்மையாகக் காணப்படும்.ஏதெனும் பிழையாக பதிவுகளை மேற்கொண்டால் மாத்திரமே இச்சமன்பாட்டிற்கு ஒழுக பரீட்சிக்கப்படும் கணக்கீடுகள் பிழைக்கும்,மற்றப்படி சமப்படும். கணக்கியலில் வரவு, செலவு என்பது பணக்கொடுக்கல்வாங்கல் சம்பந்தப்பட்டதல்ல,அது T கணக்கேட்டில் கூடிக்குறைந்து செல்லும் தன்மையினைக் கூறிப்பதாகும்.பொதுவாகசொத்துக்கள், செலவீனங்கள் வரவு/பற்றாகவும் பொறுப்புக்கள், உரிமையாண்மை, வருமானங்கள் செலவு/கடனாகவும் இருக்கும்.பேரேடுகளில் வரவு இடதுபக்கமும், செலவு வலபக்கமும் பதியப்படும்.முடிவில் ஏடுகளை செவ்வைபார்க்கும்போது வரவுமீதிகளின் கூட்டுத்தொகையும் செலவுமீதிகளில் கூட்டுத்தொகையும் சமப்படும்.
வரவும்,செலவும் பின்வருமாறு விளக்கப்படும்:
- வரவு - சமப்படுத்தப்பட்ட மீதியுடன் வரவுப்பக்கம் அதிகரித்துச் செல்லும் தன்மையுடைய அல்லது செலவுப்பக்கம் குறைந்து செல்லும் தன்மையுடைய கணக்குகள் வரவாகும்.வரவு T கணக்கேட்டில் இடதுபக்கம் பதியப்படும்.
- செலவு - சமப்படுத்தப்பட்ட மீதியுடன் செலவுப்பக்கம் அதிகரித்துச் செல்லும் தன்மையுடைய அல்லது வரவுப்பக்கம் குறைந்து செல்லும் தன்மையுடைய கணக்குகள் வரவாகும்.வரவு T கணக்கேட்டில் வலதுபக்கம் பதியப்படும்.
- வரவுக் கணக்குகள் - சொத்து மற்றும் செலவீனங்கள்.
- செலவுக் கணக்குகள் - வருமானம்,பொறுப்புக்கள்
கீழே தரப்பட்டுள்ள பொதுவில் வரவுமீதியினைக் காண்பிக்கும்:
- சொத்துக்கள்.
- கடன்பட்டோர்.
- பற்றுக்கள் - உரிமையாளரால எடுக்கப்பட்ட பணம்.
- செலவீனங்கள் - வியாபார செயற்பாட்டில் ஏற்பட்ட செலவுகள்.
- நட்டங்கள்
கீழே தரப்பட்டுள்ள பொதுவில் செலவுமீதியினைக் காண்பிக்கும்:
- பொறுப்புக்கள்.
- கடன்கொடுத்தோர்,வரி,வங்கிக்கடன்கள்.
- வருமானங்கள் - வியாபார செயற்பாட்டில் பெறப்பட்ட வருமானங்கள்.
- இலாபம்.
வரவு செலவிற்கான உதாரணம்:
கடனுக்கு கணனிகளை கொள்வனவு செய்யும்போது வரவு = கணனி க/கு (நிலையான சொத்து க/கு). செலவு = கடன்கொடுத்தோர் க/கு (பொறுப்பு க/கு).
அக் கணனிக்கொள்வனவிற்காக உரிய பணத்தினைச் செலுத்தும்போது:
வரவு = கடன்கொடுத்தோர் க/கு (பொறுப்பு க/கு). செலவு = காசு க/கு (சொத்து க/கு).
பதிவுகளின் முடிவில் (பொதுவாக மாதமுடிவில்) சகல ஏடுகளும் சமப்படுத்தப்பட்டு அவற்றின் வரவு அல்லது செலவு மீதிகளைக் கொண்டு பரீட்சைமீதி தயாரிக்கப்படும்.இப் முடிவுற்ற பரீட்சைமீதியானது கணக்குப்பதிவுகளின் பிழையின்மையினை உறுதி செய்யும் நுட்டமாகவும், முடிவுக் கணக்குகளான இலாபநட்டக் க/கு, ஐந்தொகை என்பன தயாரிப்பதற்கான தரவு அட்டவணையாகவும் தொழிற்படும்.
கீழ்வரும் அட்டவணை வரவு செலவு மீதிகள் மாற்றமடையும் தன்மையினை விளக்குகின்றது."+" அதிகரிப்பினையும், "-" குறைவடைவதனையும் குறிக்கும்.
கணக்குவகை | வரவு | செலவு |
---|---|---|
சொத்துக்கள் | + | − |
பொறுப்புக்கள் | − | + |
உரிமையாண்மை | − | + |
வருமானம் | (−) | + |
செலவீனம் | + | (−) |
Source : www.ta.wikipedia.org
No comments:
Post a Comment