Tuesday, 7 June 2016

பரீட்சை மீதி மாதிரி

பேரேடுவரவுமீதிசெலவுமீதி
காசேடு220,000
மூலதனம்320,000
பெற்ற வாடகை15,000
கொள்வனவு25,000
சம்பளம்50,000
விளம்பரம்50,000
காப்புறுதி2,000
மின்சாரம்2,000
வரி6,000
345000345000
பரீட்சை மீதில் கணக்கியல் பேரேடுகளில் மீதி வரவாக இருப்பவை வரவு நிரலிலும்,மீதிகள் செலவாக இருப்பவை செலவுப் நிரலிலும் பதியப்படும். முடிவில் வரவு செலவு இவற்றின் மொத்த கூட்டுத்தொகையும் சமப்படும்,அவ்வாறு சமப்படாவிட்டால் பேரேட்டு பதிவுகளில் வழுக்கள் இருப்பதாக கொள்ளப்படும்.இத்தகைய தன்மையால் பரீட்சை மீதியானது ஏடுகளின் துல்லியத்தன்மையினை உணர்த்தும் ஒர் குறிகாட்டியாக அமைகின்றது.பரீட்சை மீதி சமப்படுவதை மாத்திரம் கருத்தில் கொண்டு பேரேடுகளின் வழுவற்றதன்மை கொண்டதாக உறுதியாக கூறமுடியாது.எடுத்துக்காட்டாக, இடம்பெறும் வியாபார ஊடுசெயலொன்றினை பதியும் போது வரவினை செலவாகவும்,செலவினை வரவாகவும் பதிந்தால் இங்கு பரீட்சை மீதி சமப்படும் எனினும் இங்கு பதிவுமுறை பிழையாகும்.

Source : www.ta.wikipedia.org

பரீட்சை மீதி

பரீட்சை மீதி (trial balance) என்னும் இருப்பாய்வு என்பது கணக்குப் பதிவியல் செய்முறையில் ஒரு வேலைத்தாள் ஆகும்.இப் பரீட்சை மீதியானது குறிப்பிட்ட காலத்தில் வியாபார நிறுவனமொன்றால் பாரமரிக்கப்படும் சகல கணக்கியல் பேரேடுகளின் நிதி நி‌லைமையினை ஒரே பார்வையில் விளம்பும் சாரமாக காணப்படும். ஒவ்வொரு நிதிக்காலதின் முடிவின் பொழுதும்,நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கும் முன்பாகவும்,கணக்கியல் பதிவுகளின்பிழையின்மையினை உறுதிப்படுத்தவும் பரீட்சை மீதி தயாரிக்கப்படும்.

Source : www.ta.wikipedia.org

பயன்பாட்டு மென்பொருள்

பயன்பாட்டு மென்பொருள் (Application software) மென் ஒருங்கு என்றும் அறியப்படுகிறது. இது ஒரு பணி ஒரு அல்லது பல குறிப்பிட்ட பணிகளை செய்ய உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட கணினி மென்பொருள் ஆகும். எடுத்துக்காட்டாக நிறுவன மென்பொருள்கள், கணக்கீட்டு மென்பொருள், ஆஃபீஸ் சூட்ஸ், கிராபிக்ஸ் மென்பொருள் மற்றும் ஊடக பிளேயர்கள் (அ) ஊடக இயக்கிகளை (Media player) உள்ளடக்குகின்றன. பல பயன்பாட்டு நிரல்கள் ஆவணங்களை, கோப்புகளை கையாள்கின்றன.

Source : www.ta.wikipedia.org

வரவு,செலவு பற்றிய விளக்கம்

இரட்டைப்பதிவு கணக்குவைப்பு முறையானது கணக்கீட்டுச் சமன்பாட்டினால் ஆளப்படுகின்றது.கீழ்வரும் சமன்பாட்டிற்கமைவாகவே கணக்கீடுகள் மேற்கொள்ளப்படும் :
சொத்து = பொறுப்புக்கள் + உரிமையாண்மை
இச்சமன்பாட்டினை விரித்துக்கூறும்போது பின்வருமாறு காணப்படும் :
சொத்து = பொறுப்புக்கள் + உரிமையாண்மை + (வருமானம் − செலவீனம்)
முடிவாக இதனை எளிய சமன்பாட்டு வடிவில் மாற்றும்போது :
சொத்து+ செலவீனம் = பொறுப்புக்கள் + உரிமையாண்மை + வருமானம்
மேலே விரித்து எழுதப்பட்ட கணக்கீட்டுச் சமன்பாடானது எக்காலத்திற்கும் உண்மையாகக் காணப்படும்.ஏதெனும் பிழையாக பதிவுகளை மேற்கொண்டால் மாத்திரமே இச்சமன்பாட்டிற்கு ஒழுக பரீட்சிக்கப்படும் கணக்கீடுகள் பிழைக்கும்,மற்றப்படி சமப்படும். கணக்கியலில் வரவு, செலவு என்பது பணக்கொடுக்கல்வாங்கல் சம்பந்தப்பட்டதல்ல,அது T கணக்கேட்டில் கூடிக்குறைந்து செல்லும் தன்மையினைக் கூறிப்பதாகும்.பொதுவாகசொத்துக்கள், செலவீனங்கள் வரவு/பற்றாகவும் பொறுப்புக்கள், உரிமையாண்மை, வருமானங்கள் செலவு/கடனாகவும் இருக்கும்.பேரேடுகளில் வரவு இடதுபக்கமும், செலவு வலபக்கமும் பதியப்படும்.முடிவில் ஏடுகளை செவ்வைபார்க்கும்போது வரவுமீதிகளின் கூட்டுத்தொகையும் செலவுமீதிகளில் கூட்டுத்தொகையும் சமப்படும்.
வரவும்,செலவும் பின்வருமாறு விளக்கப்படும்:
  • வரவு - சமப்படுத்தப்பட்ட மீதியுடன் வரவுப்பக்கம் அதிகரித்துச் செல்லும் தன்மையுடைய அல்லது செலவுப்பக்கம் குறைந்து செல்லும் தன்மையுடைய கணக்குகள் வரவாகும்.வரவு T கணக்கேட்டில் இடதுபக்கம் பதியப்படும்.
  • செலவு - சமப்படுத்தப்பட்ட மீதியுடன் செலவுப்பக்கம் அதிகரித்துச் செல்லும் தன்மையுடைய அல்லது வரவுப்பக்கம் குறைந்து செல்லும் தன்மையுடைய கணக்குகள் வரவாகும்.வரவு T கணக்கேட்டில் வலதுபக்கம் பதியப்படும்.
  • வரவுக் கணக்குகள் - சொத்து மற்றும் செலவீனங்கள்.
  • செலவுக் கணக்குகள் - வருமானம்,பொறுப்புக்கள்
கீழே தரப்பட்டுள்ள பொதுவில் வரவுமீதியினைக் காண்பிக்கும்:
  • சொத்துக்கள்.
  • கடன்பட்டோர்.
  • பற்றுக்கள் - உரிமையாளரால எடுக்கப்பட்ட பணம்.
  • செலவீனங்கள் - வியாபார செயற்பாட்டில் ஏற்பட்ட செலவுகள்.
  • நட்டங்கள்
கீழே தரப்பட்டுள்ள பொதுவில் செலவுமீதியினைக் காண்பிக்கும்:
  • பொறுப்புக்கள்.
  • கடன்கொடுத்தோர்,வரி,வங்கிக்கடன்கள்.
  • வருமானங்கள் - வியாபார செயற்பாட்டில் பெறப்பட்ட வருமானங்கள்.
  • இலாபம்.
வரவு செலவிற்கான உதாரணம்:
கடனுக்கு கணனிகளை கொள்வனவு செய்யும்போது வரவு = கணனி க/கு (நிலையான சொத்து க/கு). செலவு = கடன்கொடுத்தோர் க/கு (பொறுப்பு க/கு).
அக் கணனிக்கொள்வனவிற்காக உரிய பணத்தினைச் செலுத்தும்போது:
வரவு = கடன்கொடுத்தோர் க/கு (பொறுப்பு க/கு). செலவு = காசு க/கு (சொத்து க/கு).
பதிவுகளின் முடிவில் (பொதுவாக மாதமுடிவில்) சகல ஏடுகளும் சமப்படுத்தப்பட்டு அவற்றின் வரவு அல்லது செலவு மீதிகளைக் கொண்டு பரீட்சைமீதி தயாரிக்கப்படும்.இப் முடிவுற்ற பரீட்சைமீதியானது கணக்குப்பதிவுகளின் பிழையின்மையினை உறுதி செய்யும் நுட்டமாகவும், முடிவுக் கணக்குகளான இலாபநட்டக் க/கு, ஐந்தொகை என்பன தயாரிப்பதற்கான தரவு அட்டவணையாகவும் தொழிற்படும்.
கீழ்வரும் அட்டவணை வரவு செலவு மீதிகள் மாற்றமடையும் தன்மையினை விளக்குகின்றது."+" அதிகரிப்பினையும், "-" குறைவடைவதனையும் குறிக்கும்.
வரவு/செலவு
கணக்குவகைவரவுசெலவு
சொத்துக்கள்+
பொறுப்புக்கள்+
உரிமையாண்மை+
வருமானம்(−)+
செலவீனம்+(−)

Source : www.ta.wikipedia.org

சிறிய உதாரணம்

சொத்தொன்றைக் கொள்வனவு செய்யும்போது (அ-து புதிதாக இயந்திரம் வாங்கும்போது) :

  1. நிலையான சொத்துகளின் பெறுமதி அதிகரிக்கும்.
  2. காசின் இருப்பு (நடப்புச் சொத்து) குறைவடையும்.
கடனுக்கு விற்பனை செய்யும்போது :
  1. பெறவேண்டிய கடன்தொகை (சொத்து) அதிகரிக்கும்.
  2. விற்பனை வருமானம் அதிகரிக்கும் (உரிமையாண்மை அதிகரிக்கும்).
மேற்கூறிய ஊடுசெயலுக்கு பணம் பெறப்படும்போது கடன்பட்டோரின் க/கு மீதி (பொறுப்பு) குறைவடையும் அதே நேரம் காசு இருப்பு (சொத்து) அதிகரிக்கும்.
கடன்கொடுத்தொருக்கு கொடுபனவு செய்யும்போது :
  1. கொடுகடன் (பொறுப்பு) குறைவடையும்.
  2. காசு இருப்பு (சொத்து) குறைவடையும்.

Source : www.ta.wikipedia.org

கணக்கியல் நடைமுறைகளும் கணக்குபதிவும்

வணிக நடவடிக்கைகளின்பொழுது பலவகையான மூலஆவணங்கள் (source documents) பரிமாறப்படுவது சதாரணமான வழக்கமாகும்.எடுத்துக்காட்டாக கொள்வனவின்போது கிரயப்பட்டியலும் (invoices) விற்பனையின்போது பற்றுச்சீட்டும் (receipts) வழங்கப்படுவது.இத்தகைய மூல ஆவணங்களில் உள்ள விடயங்களை நாளேடுகளில்(daybook) பதிவது தொடர்பில் சிக்கலான இரட்டை பதிவு முறை கையாளப்படுகின்றது.
உதாரணமாக,வணிகமொன்றில் ரூ.1000 பெறுமதியான பொருட்கள் கடனுக்கு கொள்வனவு செய்யும்போது கொள்வனவு க/கு இல் ரூ.1000 வரவு பக்கதில் அதிகரிக்கும்.அதேவேளையில் கடன்கொடுத்தோரின் க/கு இல் ரூ.1000 செலவுபக்கத்தில் அதிகரிக்கும்.அதாவது இங்கு ஒரு விடயமானது இரு வெறுபட்ட கணக்கேடுகளில் பதிவு செய்யப்படுகின்றது.இத்தகைய பதிவுமுறையின் காரணமாக ஒர் நிறுவனத்தில் உள்ள நிதி தொடர்பில் கடன்கொடுத்தோரின் பங்கென்ன,கடன்பட்டோரின் பங்கென்ன,வரி,கூலிகளின் பங்குகளென்ன என்பனவற்றினை இலகுவாக வேறுபடுத்தி அறியமுடியும்.
நாளேடுகளில் பதியப்பட்ட பதிவுகளும் அவற்றின் தொகைகளும் பின்னர் அந்தந்த உரிய கணக்கேட்டிற்கு(book of accounts) மாற்றியபின்னர் (Posting) அவற்றினை சமப்படுத்தி (balancing) மீதிகள் துணியப்படும்.இம் மீதிகளே பரீட்சை மீதி (trial balance) தயாரிப்பிற்கு பயன்படும்.பரீட்சை மீதி தயாரிப்பின்போது செய்முறைத்தாள் இரு நிரல்களாக பிரிக்கப்பட்டு சமப்படுத்தப்பட்ட கணக்கேடுகளில் வரவு மீதியினைக் காண்பிப்பவை இடதுபக்கமும் செலவு மீதியினைக் காண்பிப்பவை வலதுபக்கமும் நிரல்படுத்தப்படும் இப்பட்டியலே குறிப்பிட்ட திகதியில்(பொதுவாக ஒவ்வொரு மாதமுடிவில்) உள்ள கணக்குகள் சகலவற்றின் மீதியினை விளம்பும்.முடிவில் இருபக்கமும் நிரல்படுத்தப்பட்ட மீதிகள் கூட்டப்படும்போது சமமான தொகையினை காண்பிக்கும்.அவ்வாறு சமப்படாதுவிடின்,இரட்டைப்பதிவின்போது வழுக்கள், தவறுகள், விடுபாடுகள் ஏதெனும் இடம்பெற்றுள்ளதாக கருதப்படும்.இவ்வழுக்களை இல்லாது செய்ய கணக்கீட்டுக்கொள்கைக்கமைவாக கணக்காளரால் செம்மையாக்கம் (adjustments) செய்யப்படும்.முடிவில் தோன்றும் பரீட்சை மீதிகள் நிதிக்கூற்றுக்கள் (financial statements) தயாரிக்க பயன்படுத்தப்படும்.
பரீட்சை மீதியினைக்கொண்டு தயாரிக்கப்படும் நிதிக்கூற்றுக்களாவன:

Source : www.ta.wikipedia.org

கணக்கு பதிவியலில் பாவிக்கப்படும் சுருக்ககுறியீடுகள்

  • a/c - account - கணக்கு
  • B/S - Balance Sheet - ஐந்தொகை
  • b/d - brought down - கீழ் கொண்டு வரப்பட்டது(மீதி)
  • c/f - carried forward - முன் கொண்டு செல்லப்பட்டது(மீதி)
  • Dr - debit - பற்று
  • Cr - credit - செலவு
  • G/L - General Ledger - பொது பேரேடு
  • P&L - Profit & Loss வருமான செலவீன கணக்கு
  • TB - Trial Balance - பரீட்சை மீதி

Source : www.ta.wikipedia.org